நாளை ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... !!

 
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!! கனமழை எதிரொலி!!

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று நவம்பர் 2ம் தேதி   ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

விடுமுறை

இதனிடையே வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'மிக்ஜாம்' புயல் தீவிர புயலாக மாறுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னைக்கு 230 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல் கிழக்கு - தென் கிழக்கில் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வட தமிழகம்,  ஆந்திராவை  நெருங்கும். தீவிர புயலாக கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை

இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை என்றும்,  அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டும் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 'மிக்ஜாம்' புயல் எச்சரிக்கை காரணமாக நாளை டிசம்பர் 4ம் தேதி   ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web