டிசம்பர் 4ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை... கலெக்டர் அதிரடி அறிவிப்பு!!

 
விடுமுறை

தமிழகத்தில் பொதுவிடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள் , திருவிழாக்களுக்காக உள்ளூர் விடுமுறைகளும் விடப்படுவதுண்டு. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 4ம் தேதி புனித சவேரியார் பேராலய பெருவிழா  கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டிசம்பர் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 450 வருடங்களுக்கு முன் புனித சவேரியார்  இந்தியாவிற்கு வந்தார்.

விடுமுறை

அவர் இந்தியாவில்   கன்னியாகுமரி மாவட்டம். கோட்டாரில் கி.பி. 1542 முதல் 1552 வரை உள்ள காலகட்டத்தில் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் பணிபுரிந்தார்.  1552ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி இங்கேயே இயற்கை எய்தினார். அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தேவாலயம் பின்னர், பேராலயமாக தரம் உயர்த்தப்பட்டு உலகப்பிரசித்தி பெற்றது.
சுற்றுலா பயணிகள் பெருமளவில் வந்து செல்லும் இந்த புனித சவேரியார் பேராலய பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் விழாவாக கொண்டாடப்படும்.  அந்த வகையில்  நவம்பர்  24ம் தேதி கொடியற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஆடம்பர கூட்டு திருப்பலி, முதல் திருவிருந்து திருப்பலி, குணமளிக்கும் திருப்பலி, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர், மலையாள திருப்பலி உட்பட  பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி

டிசம்பர் 4ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் பக்தர்கள் கலந்து கொள்வர்.  இதனை முன்னிட்டு  கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  அன்றைய விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், மற்றொரு நாள் பணிநாளாக அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web