இன்று பள்ளிகளுக்கு விடுமுறை .. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!

 
நிஃபா வைரஸ்

தமிழகத்தின் அண்டை மாநிலமாம் கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இதனால்   2 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்   உயிரிழந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது குழந்தை உட்பட 4 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிலும் 2  பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
 
இதையடுத்து, கேரள சுகாதார அமைச்சகம் நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர கட்டுப்பாடு நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கோழிக்கோட்டில் 9 கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகளில் உள்ள சில அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள்  மூடப்பட்டன.

அடினோ வைரஸ்


கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தொழில்முறை கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்கள் அங்கன்வாடிகள் நேற்றும் இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளன.  
இதனையடுத்து கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த  விடுமுறைகள்  பல்கலைக்கழக தேர்வுகளுக்கு பொருந்தாது. அவை திட்டமிட்டபடி நடைபெறும் அதில் எந்த மாற்றமும் இல்லை என கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் கீதா அறிவித்துள்ளார்.

 இப்பகுதிகளில் உள்ள  பள்ளிகள், வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  2 பேர்  உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் தற்போது  130க்கும் மேற்பட்டவர்கள் வைரல் தொற்று குறித்து பரிசோதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

நிஃபா வைரஸ்

தற்போது ஒரு குழந்தை மற்றும் முதியவர் இருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் தொற்றின் அதிகரிப்பு காரணமாக தற்போது கேரளா முழுவதும் மக்கள் மத்தியில் அச்சம் பரவி வருகிறது. 2018ல்   முதல் முதலில் கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. அது முதல்  தற்போது  4 வது முறையாக நிபா வைரஸ் தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web