கேரளத்தில் அதிர்ச்சி... பள்ளிக்குள் துப்பாக்கி சூடு நடத்திய முன்னாள் மாணவர்!

 
ஜெகன்

கேரளாவின் திருச்சூர் நகரின் மையத்தில் உள்ள விவேகோதயம் பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர் மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவியது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளி ஜெகனை போலீசார் கைது செய்தனர். அவர் ஏர் கன் மூலம் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. அவர் போதையில் இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் இன்று (நவ.21) காலை 11 மணியளவில் நடந்தது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர், 2022 இல் பள்ளியில் இருந்து எஸ்எஸ்எல்சி முடித்தார், பள்ளி அலுவலகத்தை அடைந்து தனது ஆசிரியர்களிடம் சண்டை போட்டுள்ளார். அவர் முரட்டுத்தனமாக பேசியதாக கூறப்படுகிறது.

Police detain former student for opening fire in Thrissur school; no  casualty reported - The South First

பின்னர் வகுப்பறைக்குள் நுழையும் முன் 3 முறை துப்பாக்கியால் சுட்டார். ஆசிரியர்களையும் மிரட்டினார். அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பள்ளிக்கு வருவதற்கு முன்பே, அவர் வளாக சுவரில் குதித்து சம்பவ இடத்தில் இருந்து தப்பினார். இதையடுத்து போலீசார் துரத்திச் சென்று அவரை கைது செய்தனர். 

பள்ளி வட்டாரங்களின்படி, அவர் முன்பு வேறொரு பள்ளியில் படித்து வந்தார், ஆனால் அவர் தனது முன்னாள் பள்ளியில் ஆசிரியர்களுடன் சில பிரச்சனைகள் இருந்ததால் விவேகோதயத்தில் சேர்ந்தார் என பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெகன் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web