பள்ளியில் துப்பாக்கிச் சூடு... 4 பேர் உயிரிழப்பு...அமெரிக்காவில் தொடரும் சோகம்!

 
துப்பாக்கி

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலம் லேலேண்ட் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இடையிலான கால்பந்தாட்டப் போட்டிக்காக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கூடியிருந்தனர்.

அமெரிக்கா போலீஸ்

அப்போது மைதானத்திற்குள் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர் தன்னுடன் மறைத்து கொண்டுவந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுடத் தொடங்கினார். திடீரென நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கி

துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?