மாரடைப்பால் பள்ளிச்சிறுவன் பலி!! தொடரும் சோகம்!!

 
மாரடைப்பு

சின்னஞ்சிறு வயதில் மாரடைப்பு ஏற்படுவது வழக்கமாகி வருகிறது. நடனம் ஆடிக்கொண்டிருந்த போதே சரிந்து பலி, திருமண மேடையில் பலி, உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போதே பலி என தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக சமீபகாலமாக கல்லூரி , பள்ளி மாணவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர்  சிறுவன் துஷ்யந்த் பிப்ரோதர். இவருக்கு வயது 12.

மாரடைப்பு

இவர், அதே கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியிலேயே  6ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை சிறுவனின் தாய் வழக்கம்போல் தனது வேலைகள் செய்யத் தொடங்குவதற்காகப் படுக்கையில் இருந்து எழுந்துள்ளார்.அப்போது வீட்டின் முற்றத்தில் மகன் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே பெற்றோர்கள் மகனைத் தூக்கிக் கொண்டு அருகே உள்ள மருத்துவமனைக்குச் சென்றனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

மரணம் மாரடைப்பு நெஞ்சுவலி


சிறுவன் இறப்பிற்கு மாரடைப்பு காரணம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சிறிய வயதில் எப்படி மாரடைப்பு வந்தது என்று தெரியாமல் சிறுவனின் பெற்றோர் வேதனையுடன் இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.துஷ்யந்தின் திடீர் மரணத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த கிராம மக்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுவன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினோம் என விஜாப்பூர் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்தார். கிராம மக்கள் அனைவரும் துஷ்யந்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web