பகீர் வீடியோ... பள்ளி மாணவன் ரேபிஸ் நோயால் பலி!! நாய் கடித்ததை சொல்லாமல் மறைத்ததால் சோகம்!!

 
ஷாவாஸ்

இன்றைய பள்ளிப்பிள்ளைகள் பெற்றோரிடம்  பேசுவதே கிடையாது. தேவையானதை மட்டும் கேட்டு வாங்கிக் கொண்டு மற்றவைகளை பகிர்வதே இல்லை. பயங்கரங்கள், விபரீதங்களை கண்டு அச்சப்படுவதும் இல்லை. இதனால்  சிலநேரங்களில் அவர்கள் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்பதையும் உணர்வதில்லை. நாய் கடித்து விட்டால் தடுப்பூசி போட்டால் சரியாகி விடும். ஆனால் சொல்லாமல் மறைத்ததால் ஒரு சிறுவன் பலியாகிவிட்டான். தந்தையின் மடியிலேயே உயிரை விட்ட சோகமும் நடக்கிறது.  தந்தை கதறித் துடிக்கிறார். 

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில்  சரண் சிங் காலனியில் வசித்து வருபவர்  யாக்கூப். இவர் அதே பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடையை  நடத்தி வருகிறார். இவரது மகன் ஷாவாஸ் . ஷாவாஸ்   8ம் வகுப்பு படித்து வந்தார்.  இவர் நாய்ப்பிரியர் . பக்கத்து வீட்டில் இருந்த பொமரேனியன் நாய்க்குட்டியுடன் விளையாடி மகிழ்வார்.    பெற்றோர்கள் இதனை கண்டித்துக் கொண்டே இருந்தனர்.


கடந்த மாதம் அந்த நாய்க்குட்டி, ஷாவாஸை கடித்துவிட்டது. ஏற்கனவே திட்டிய பெற்றோர்கள் இதை சொன்னல் அடிப்பார்கள் என்பதால், அதனை சிறுவன் மறைத்துவிட்டான். செப்டம்பர் 4ம் தேதி   காலையில் இருந்து சிறுவனின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து விட்டது. சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுவன் உணவு உண்ண மறுத்து, தண்ணீரைக் கண்டால் பயந்து வெறுத்து ஒதுக்கி, வித்தியாசமாக சப்தம் எழுப்பினான்.   அவனது நடத்தையிலும் மாற்றங்கள் தெரியத் தொடங்கின.   பதறிப் போன பெற்றோர் உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், நாய் கடித்து விஷம் தலைக்கேறி விட்டதாக கூறினர். பையனிடம்  விசாரித்ததில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நாய்குட்டி ஒரு மாதத்திற்கு முன்னர் தன்னை கடித்ததாக ஷாவாஸ் கூறினான்.  இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.  

சிறுவன் பலி


இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்  பக்கத்து வீட்டை சேர்ந்த சுனிதா, ஆகாஷ், ஷிவானி மற்றும் ராஷி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாய் குட்டிக்கு தடுப்பூசி போடாமல் வளர்த்து வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. அதே நேரம், நாய் உரிமையாளர்கள் தங்கள் வீட்டு நாய் சிறுவனை கடிக்கவில்லை எனக் கூறியுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web