பகீர்... பள்ளி மாணவன் கார் ஓட்டி கோர விபத்து... ஒருவர் பலி... 4 மாணவர்கள் படுகாயம்..கதறிய பெற்றோர்... . !

 
கார் விபத்து

தற்போதைய பள்ளி மாணவர்கள் எதிலும் த்ரில்லிங் ஆக இருக்கணும் என நினைத்து பல நேரங்களில் ஆபத்தில் சிக்கி விடுகின்றனர். பள்ளி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து காரில் சுற்றுலா சென்ற போது பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி   ஜலால்பேட்டை பகுதியில் வசித்து வரும்  10ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் ஒன்றாக சேர்ந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலாச் செல்ல திட்டமிட்டனர் . இவர்களும்  11ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவரையும் சேர்த்துக் கொண்டனர். இதில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் காரை ஓட்டியதாக தெரிகிறது.  

விபத்து


அப்போது கார் வாணியம்பாடி அடுத்த வளையம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில்  சென்று கொண்டு இருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து  கார் மேம்பாலம் தடுப்பு சுவர் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில்  காரில் பயணம் செய்த 10ஆம் வகுப்பு மாணவன் அதனான் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து பலியானார்.  படுகாயம் அடைந்த ராஷித்,  ஈஹான் , தக்வீம் , தல்ஹா  4 மாணவர்களையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு  சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  விபத்தில் பலியான மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக பெங்களூரு, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் காரை ஓட்டி சென்று விபத்தில் சிக்கி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி படிப்பு முடித்ததும் கல்லூரிக்கு சென்று படித்து நல்ல பணிக்கு செல்வார் என்று ஆசையாக வளர்த்த மகன் இன்று   கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஆம்புலன்ஸ்

பள்ளி படிக்கும் சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிப்பதே தவறு. இந்நிலையில் கார் போன்ற 4 சக்கர வாகனங்களை எடுத்து செல்ல அனுமதிப்பது பெருங்குற்றமாகும்.  இதுபோன்ற செயல்களால் அவர்களுக்கு மட்டுமல்ல எதிரில் வருபவர்களும் ஆபத்தில் சிக்குவார்கள்  என்பதை பெற்றோர் உணர வேண்டும். 2 மற்றும் 4 சக்கர வாகங்கள் ஓட்டினாலும்  குறிப்பிட்ட வயது வரை  பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளிடம்  வாகனங்களை ஓட்ட அனுமதிக்க கூடாது என  காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  
 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web