போச்சே... பேருந்து சக்கரம் ஏறி பள்ளி மாணவன் 2 கால்களும் நசுங்கி துண்டான கொடூரம்...!!

 
சந்தோஷ்

தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம். ஆனால் பள்ளி கல்லூரி செல்லும் நேரங்களில் பேருந்து எண்ணிக்கை குறைவாகவே இயக்கப்பட்டு வருவதாக மாணவர்களிடையே பொதுவான குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனால் கிடைக்கும் பேருந்தில் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்வதை காணலாம். ஓட்டுனரும், நடத்துனரும் மேலே ஏறி வாங்க என எத்தனை முறை கூறினாலும் சிலர் அலட்சியமாக வேண்டுமென்றே நின்று கொண்டு வருவதும் உண்டு.  

படிக்கட்டில் மாணவர்கள்

குறிப்பாக சென்னையில் படிக்கட்டில் தொங்கிய படி செல்வதையே வாடிக்கையாக கொண்ட மாணவர்கள் பலர்.. இந்த மாதிரி பயணங்களில் ஆபத்தும் நிறைந்துள்ளன என்பதை இளைய சமுதாயம் புரிந்து கொள்வதே இல்லை.   இந்நிலையில், சென்னை குன்றத்தூரில் படிக்கட்டில் பயணம் செய்த போது விபத்தில் சிக்கிய பள்ளி மாணவனின் இரண்டு கால்கள் துண்டாகியுள்ளது. இச்சம்பவத்தால் சக மாணவர்கள் மிரண்டு போயுள்ளனர்.  சென்னை குன்றத்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து  வரும் மாணவன் சந்தோஷ்.

ஆம்புலன்ஸ்

இவர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் சந்தோஷ் சக மாணவர்களுடன் அரசு பேருந்தில் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தார். இவர்  எதிர்பாராதவிதத்தில்  தவறி கீழே விழுந்துவிட்டார்.  அப்போது பேருந்தில் பின்பக்க சக்கரம் சந்தோஷின் இருகால்கள் மீது ஏறி இறங்கியதில் கால்கள் நசுங்கின. இதனால் பள்ளி மாணவன் வலி தாங்க முடியாமல் கதறி துடித்தார். உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.  
 இந்த விபத்து குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறை மாணவனை ஆம்புலன்ஸ் மூலம்  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.  பின்னர் மாணவனுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 2 கால்களும் அகற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இச்சம்பவம்  குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web