நெகிழ்ச்சி... 1 டன் அரிசியை வயநாடுக்கு அனுப்பிய பள்ளி மாணவர்கள்!

இதில் தாங்கள் அறுவடை செய்த அரிசியில் 1000 கிலோ அரிசியை மலப்புரம் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.வினோத்திடம் மாணவர்கள் வழங்கினார்கள்."வயநாட்டு மக்களின் அவல நிலையைக் கண்டு, எங்கள் மாணவர்கள் மனமுவந்து நிவாரணப் பணிகளுக்கு உதவ முன்வந்தனர்" என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ மம்மு கூறினார். மாணவர்கள் நன்கொடையாக வழங்கிய பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.80,000.மாணவர்களின் இந்த முயற்சியை பாராட்டிய கலெக்டர் வினோத், மற்ற பள்ளிகளும் இதை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், வயநாடு பேரிடரில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டித்தர உதவுவது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டறிந்தார்.

பள்ளி அருகே, 4.5 ஏக்கர் பரப்பளவில், மாணவர்கள், கடந்த ஆண்டு, நெல் சாகுபடி செய்தனர். 'ஞாரும் சோறும்' என்ற திட்டமானது உள்ளூர் விவசாயி வீரபத்ரனால் வழிநடத்தப்பட்டது மற்றும் உள்ளூர் விவசாயிகள் கூட்டமைப்பான பாத சேகர சமிதியால் ஆதரிக்கப்பட்டது. இந்த பள்ளி மாணவர்கள், இந்த வருடத்தில் மட்டும் 10,000 கிலோ அரிசியை அறுவடை செய்துள்ளது
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
