பயங்கரம்.... எஸ் ஐ யை தாக்கி மூக்கை உடைத்த பள்ளி மாணவர்கள்!!

 
பாலமுருகன்

சென்னை கொடுங்கையூர் மூலக்கடை   அண்ணா நகரில் வசித்து வருபவர் பாலமுருகன். இவர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு எஸ்.ஐயாக பணிபுரிந்து வருகிறார்.  இவர்   தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் வைத்தியநாதன் மேம்பாலம் அருகே சாதாரண உடையில்   ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.  மேம்பாலத்துக்கு கீழே சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த சிறுவர்கள்  4   பேரை  அழைத்து விசாரணை நடத்தினார். போதையில் இருந்த அந்த கும்பல், எஸ்.ஐ பாலமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.

பாலமுருகன்


அத்தோடு நிறுத்தாமல் நால்வரும் சேர்ந்து  பாலமுருகனை கற்களாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.  இதில் பாலமுருகனுக்கு முகத்தில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு மூக்கு தண்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் வலியில் அலறித் துடித்தார். உடனடியாக   சக காவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.விரைந்து சென்ற அவர்கள்  பாலமுருகளை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்ததும்   வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர்   எஸ்.ஐ பாலமுருகனை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  

போலீஸ்

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதில்    தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியில் வசித்து வந்த 4 பேரும்   அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் 4 பேரும் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சிகரமான தகவல்.  நால்வரும்  10  மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. 4பேரையும்  கைது செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். ரோந்து சென்ற  எஸ்.ஐயை போதையில் இருந்த பள்ளி மாணவர்கள் தாக்கிய சம்பவம் போலீஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை