அரசு பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: நடத்துநர் கைது!

 
நடத்துனர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் 16 வயது மாணவி தனது அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன் தினம் திறனாய்வு தேர்வு எழுத சென்ற அவர், தேர்வு முடிந்தபின் வீட்டுக்கு திரும்பும் போது அரசு பேருந்தில்  பயணம் செய்தார்.

அந்த பேருந்தில்  கண்டக்டராக இருந்த சுதாகர் (47), பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தார் என தெரிவிக்கப்படுகிறது. மாணவி மன உளைச்சலுடன் வீட்டிற்கு சென்றதும், பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை அழுத படி தெரிவித்தார்.

போலீஸ்

இது குறித்து மாணவியின் பெற்றோர் உடனடியாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்தின் கண்டக்டர் சுதாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?