பள்ளிகள், வங்கிகள் மூடல்.... வேகமெடுக்கும் நிஃபா வைரஸ் பரவல்!!

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இந்த வைரஸ்கள் வெளவால்கள், பன்றிகள் அல்லது பாதிக்கப்பட்ட பிற நபர்களின் உடல் திரவங்களின் மூலம் மற்றவர்களுக்கு பரவி வருகிறது. இந்நிலையில் கேரள சுகாதார அமைச்சகம் கோழிக்கோடு மாவட்டத்தின் ஏழு கிராமங்களை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவித்துள்ளது.
இப்பகுதிகளில் உள்ள பள்ளிகள், வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் தற்போது 130க்கும் மேற்பட்டவர்கள் வைரல் தொற்று குறித்து பரிசோதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
தற்போது ஒரு குழந்தை மற்றும் முதியவர் இருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் தொற்றின் அதிகரிப்பு காரணமாக தற்போது கேரளா முழுவதும் மக்கள் மத்தியில் அச்சம் பரவி வருகிறது. 2018ல் முதல் முதலில் கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. அது முதல் தற்போது 4 வது முறையாக நிபா வைரஸ் தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!