ஸ்கூட்டி - பைக் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. சிறுவன் உட்பட 3பேர் பரிதாப பலி!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் கீழக்குறிச்சி என்ற பகுதி உள்ளது. இந்த சாலையில் சென்ற ஸ்கூட்டியும் , இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. ராதிகா தனது மகன் மோனிஷுடன் ஸ்கூட்டியில் தாய் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே விக்னேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும், ஸ்கூட்டியும் நேருக்கு நேர் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் விக்னேஷ் (18), மோனிஷ் (9), ராதிகா (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா