அதிர்ச்சி... தீப்பிடித்து எரிந்த ஸ்கூட்டி... இளம்பெண் கருகி படுகாயம்!!
பெட்ரோல் பங்க்குகளில் மொபைல் போன் உபயோகிக்க கூடாது என விதிமுறைகள் உள்ளன. பெட்ரோல் போடும் நேரத்தில் மொபைல் போனில் அழைப்புக்கள் வந்தால் பேசுவதை தவிர்க்க வேண்டும். பலரும் இதனை அலட்சியமாக எடுத்துக் கொள்கின்றனர். அதனை செய்யாததால் தீப்பிடித்து எரிந்தசம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வியாசர்பாடியில் வசித்து வருபவர் ரோகிணி.இவருக்கு வயது 25. இவர் மதுரவாயலில் உள்ள பிரபல எண்ணெய் நிறுவனத்தில், ஏரியா விநியோகஸ்தராக பணிபுரிந்து வருகிறார். நேற்றைய தினம் வழக்கம் போல் வேலை முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி, அதனை ஒரு பையில் போட்டு, வண்டியின் முன்பகுதியில் தொங்க விட்டுக் கொண்டு சென்றார். பெட்ரோல் போட்டிருந்த பையிலேயே தனது மொபைலையும் போட்டு வைத்து இருந்தார்.
அப்போது திடீரென அவரது மொபைலுக்கு அழைப்பு வந்தது.அதனை எடுப்பதற்குள் உடனடியாக பெட்ரோல் வைத்திருந்த பையில் தீப்பற்றியது. அது பெட்ரோல் கேனுக்கும் பரவி மளமளவென எரிய தொடங்கியது. ரோகிணி வண்டியில் இருந்து கீழே இறங்குவதற்குள், அவர் மீதும் தீப்பிடித்து அவர் உடலிலும் தீக்காயம் ஏற்பட்டது.அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து ரோகிணியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெட்ரோல் கேன் மூடியை சரியாக மூடாததால், பெட்ரோல் கசிந்ததாகவும், அப்போது செல்போனுக்கு அழைப்பு வந்ததால், தீப்பற்றி எரிந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!