கழிவறையை பூட்டி வெச்சிடறாங்க...கதறும் அரசு பள்ளி மாணவிகள்... கண்ணீர் வீடியோ!

 
திலகவதி

தமிழகத்தில்  தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்தை கொண்டு வர தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் அவை மாணவ, மாணவிகளுக்கு சென்று சேரமுடியாத வகையில் அதிகாரிகளும், இடையில் இருப்பவர்களும் அதிகாரம் செய்து வருவதாக பரவலான குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் மதுரையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் கண்ணீர் கதை இருக்கிறது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் செயல்பட்டு வருகிறது அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி . இங்கு மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து  சுமார்   800 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து  வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் திலகவதி .  இவரின்  சட்டதிட்டம், அதிகாரம் கொடுமை தாங்க முடியாமல் பல மாணவிகள் டி.சி வாங்கி சென்றதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வீடியோவை அதே பள்ளியில் படித்து வரும்  அரசுப் பள்ளி மாணவிகள்  சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.


அந்த வீடியோவில், " நாங்கள் அனைவரும் மதுரை திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகள்  . எங்கள் பள்ளிக்கு சமீபத்தில் புதிதாக திலகவதி என்ற ஒரு தலைமை ஆசிரியர் வந்துள்ளார். இவர்  பள்ளிக்கு யாரேனும் தாமதமாக வந்தால்  வெளியில் நிற்க வைத்து விடுகிறார். மாதவிலக்கு நாட்களிலும் கூட  வெயிலில் முட்டி போடச் சொல்லிக் கஷ்டப்படுத்துகிறார்.
நாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து  காலை 7 மணிக்கெல்லாம் பஸ் ஏறினால்தான் இங்கு நேரத்துக்கு வரமுடிகிறது. சில நேரங்களில் பேருந்து தாமதம் ஆகிவிடும். அப்படி சூழ்நிலைகளில் பள்ளி வரவும் லேட் ஆகிவிடும். அதை எடுத்து கூறினால்  ஆபாச வார்த்தைகளால் திட்டுகிறார். கழிப்பறையை பூட்டி சாவி எடுத்துக் கொள்கிறார்.திறந்திருக்கும் நேரத்திலும்  தண்ணீர் வசதிகூட இருப்பதில்லை. சாப்பிட நேரம் குறைவாக தான் இடைவேளை விடுகிறார்.   மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த  நாங்கள் அரசுப் பள்ளியை நம்பிதான் உள்ளோம். எதாவது புகார் தெரிவித்தால் டி.சி வாங்கி சென்று விடுங்கள் என காட்டமாக பதில்  கூறுகிறார். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டும் தான் கழிப்பறையில் தண்ணீர் வரும் என்கிறார்.  பெரிய அதிகாரிகள் வந்தால் மட்டும்தான் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனை கூறினால்  பெற்றோர்கள் கூட்டம் போட்டு எங்களை  தரக்குறைவாக பேசிவிடுகிறார் இதனால்  எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது" என வேதனை தெரிவித்துள்ளனர்.

திலகவதி
இந்த அவல நிலை குறித்து  மாணவிகளின் பெற்றோர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில்  தங்கள் பிள்ளைகளை கழிவறை செல்ல அனுமதிக்காததால், பிள்ளைகள் தண்ணீர் அருந்துவதையே தவிர்த்து வருகின்றனர்   இந்நிலை குறித்து   மதுரை மாவட்ட கல்வி அலுவலர், கார்த்திகா  "மாணவிகள் வெளியிட்டுள்ள வீடியோ   இதுவரை எங்களுக்கு  வரவில்லை. மாணவிகளின் பெற்றோர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.   வீடியோவையும் அனுப்பி விடுங்கள்.  உடனடியாக மேல் அதிகாரிக்குத் தகவல் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web