பிரபல எழுத்தாளர், திரைக்கதையாசிரியர் எம்.கே.மணி காலமானார்.. நடிகர் கமல் உட்பட பிரபலங்கள் இரங்கல்!
திரைப்படக் கட்டுரைகள் வழியாக சினிமாக் கலை மீதான ரசனையை வளர்க்க முயன்றவர், திரைக்கதையாளர், சிறுகதை ஆசிரியர், எழுத்தாளர் மணி எம்.கே. மணி மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்கள். pic.twitter.com/S04xlsxiVL
— Kamal Haasan (@ikamalhaasan) July 16, 2024
கடந்த சில வருடங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த எம்.கே. மணி அதற்காக டயாலிஸிஸ் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில், நேற்றிரவு உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கல் செய்தியில், “திரைப்படக் கட்டுரைகள் வழியாக சினிமாக் கலை மீதான ரசனையை வளர்க்க முயன்றவர், திரைக்கதையாளர், சிறுகதை ஆசிரியர், எழுத்தாளர் மணி எம்.கே. மணி மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்கள்” என்று பதிவிட்டுள்ளார்
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
