திருச்செந்தூர் கடற்கரையில் கடல் நீர் 80 அடி உள்வாங்கல் !
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடல் நீர் தொடர்ந்து இரண்டாவது நாளாக சுமார் 80 அடி தூரத்துக்கு உள்வாங்கியுள்ளது. இதனால் பாறைகளில் பாசி படிந்த நிலையில் பக்தர்கள் அவற்றின் மீது அமர்ந்து நீராடினர்.

சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதில், கடலில் நீராடிய சில பக்தர்களுக்கு தோல் ஒவ்வாமை மற்றும் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மீன்வளத் துறை மற்றும் மரைன் போலீஸார் ஆய்வு நடத்தி, ஜெல்லி மீன்களை அகற்றினர். தற்போது கரை ஒதுங்கியவை சாதாரண வகையைச் சேர்ந்ததாகவும், அவை விஷமில்லாதவை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆழ்கடல் பகுதியில் வெப்பநிலை மாற்றம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதால், ஜெல்லி மீன்கள் கரையை நோக்கி வருவதாக கூறப்படுகிறது. கடல் உள்வாங்கல் ஏற்பட்டிருந்தாலும் பக்தர்கள் வழக்கம்போல கடலில் புனித நீராடலில் ஈடுபட்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
