நடித்தால் நோட்டு கொடுப்போம், நடிப்பை நிறுத்தினால் நாட்டைக் கொடுப்போம்’ என்ற மனோபாவம் அவமானம்... சீமான் விளாசல்!

 
சீமான்

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போதைய தமிழக அரசு மற்றும் அரசியல் நிலை குறித்து கடுமையாக விமர்சித்தார்.

அவர் கூறியதாவது:
“தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும். அரசு தற்போது மதுபான குடோன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது; ஆனால் விவசாயிகளின் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க குடோன்கள் அமைக்கப்படவில்லை. இது எந்த வகை முன்னுரிமை?” என்று சீமான் கேள்வி எழுப்பினார்.மேலும், தமிழக கபடி வீரர்களுக்கு ரூ.25 லட்சம் மட்டுமே வழங்கியிருக்கும் நிலையில், ஆந்திர செஸ் வீரருக்கு ரூ.5 கோடி பரிசாக வழங்கியதை சுட்டிக்காட்டி, “தமிழக அரசு தன் மக்களைப் பற்றிய மரியாதை இழந்துவிட்டது” எனக் கடுமையாக விமர்சித்தார்.

சீமான் விஜய்

அவர் பேச்சு நடந்து கொண்டிருக்கையில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க வந்ததால், காவல்துறையினர் செய்தியாளர் சந்திப்பை முடிக்குமாறு அறிவுறுத்தினர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. எனினும், சீமான் “ஒரு நிமிடம் பேச்சை முடித்துவிடுகிறேன்” எனக் கூறி தனது உரையைத் தொடர்ந்தார்.

திரைப்படத்தினரின் அரசியல் வருகையைப் பற்றியும் அவர் கடும் விமர்சனம் செய்தார். “நடிப்பு திறமை உள்ளவர்களே நாட்டை ஆளத் தகுதி பெற்றவர்கள் என்ற மக்களின் எண்ணம் ஆபத்தானது. ‘நடித்தால் நோட்டு கொடுப்போம், நடிப்பை நிறுத்தினால் நாட்டைக் கொடுப்போம்’ என்ற மனோபாவம் தமிழ் சமூகத்துக்கே அவமானம். மற்ற மாநிலங்களில் சினிமா இருந்தாலும், அரசியலை சினிமா வழி நடத்துவது தமிழகத்தில் மட்டுமே நடக்கிறது. இது மாற வேண்டியது அவசியம்,” என்றார்.

சீமான்

தவெக தலைவர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவது அவரது தனிப்பட்ட முடிவு; அதில் எனக்குக் கருத்து கூறத் தேவையில்லை,” என பதிலளித்தார்.அவர் மேலும் கூறினார்:“அரசியல் என்பது வாழ்வியல். முன்னோர் வாழ்ந்த வழிமுறைகளைப் புரிந்துகொள்வதே உண்மையான அரசியல். ஆனால் இன்று கல்வி வணிகமாக மாறியதால், அரசியல் பற்றிய புரிதல் தமிழ்ச் சமூகத்தில் குறைந்துவிட்டது. அறிவார்ந்த சமூகத்தின் எதிர்காலத்தைக் காப்பதற்காக, தமிழ் மக்கள் பகுத்தறிவுடன் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்,” என்று சீமான் வலியுறுத்தினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!