சீமான் அதிர்ச்சி... பறிபோகும் ‘விவசாயி சின்னம்...’ தொண்டர்கள் கவலை!
நாம் தமிழர் கட்சியின் ‘விவசாயி சின்னம்’ வரும் மக்களவைத் தேர்தலில் வேறொரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது நாம் தமிழர் கட்சி தொண்டர்களையும், அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணிகளை இறுதி செய்வதிலும், பிரசார யுக்திகளை வகுப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

வரும் தேர்தலிலும் வழக்கம் போல் இந்த முறையும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்று அறிவித்து, நட்டிலேயே முதல் கட்சியாக வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. தேர்தல் வேலைகளிலும் சுழன்றடித்து வரும் தொண்டர்கள், தொடர்ந்து வேட்பாளர் அறிமுக கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்களில் பங்குபெற்று வருகின்றனர். கடந்த இரண்டு தேர்தல்களிலும் விவசாய சின்னத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டு திமுக, அதிமுக, பாஜக என பிற கட்சி வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். கணிசமான வாக்குகளைப் பெற்று, பல இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களாகவும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் இருந்தனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னம், ஆந்திராவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கி தேர்தல் அறிவித்துள்ளதால், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளதாகவும், கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒருவேளை வழக்கு தொடரப்பட்டாலும், தேர்தல் ஆணைய நடைமுறையில் தலையிட முடியாது என்பதால், உடனடியாக உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் முடிவெடுக்காது என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நாம் தமிழர் கட்சிக்கு வேறு சின்னம் ஒதுக்கப்படலாம் என்கிற கருத்து நிலவி வருகிறது. இது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!
