10 ஆண்டுகள் இருந்தால் தான் அரசியலை நெருங்க முடியும்... விஜய் புதுக்கட்சி குறித்து சீமான் விளாசல்...!

 
சீமான்

இன்று நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில்  அரசியல் கட்சியை  தொடங்கி இருக்கிறார்  . இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் அரசியல் என்பது தொழில் அல்ல இது ஒரு  புனிதமான பணி.. சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு .  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை .  யாருக்கும் ஆதரவும் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த உடன்  கட்சியின் கொள்கை, கொடி சின்னம்  வெளிப்படுத்தப்படும் .  

விஜய்

ஒப்புக்கொண்ட படத்தை முடித்தபின் முழுமையாக சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியல் பணியை மேற்கொள்வேன் எனவும் நடிகர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  
இதுகுறித்து சீமானிடம் கேட்கப்பட்ட போது   ”தொடங்குதல் எளிது.. தொடர்வது கடினம். என்னை இனி யாராலும் தோற்கடிக்க முடியாது... ஏன்னா நான் அவ்வளவு தோல்வியை கண்டவன். ஆதலால் இந்தத் தேர்தல் இல்லை என்றாலும் அடுத்த தேர்தல் என போய்க்கொண்டே இருப்பேன்.

விஜய்


தொடங்கும்போது இருக்கின்ற ஈடுபாடு கடைசி வரை இருக்க வேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலையை பொறுத்தவரை நடிகர்   கட்சி ஆரம்பித்தால் அவரின் ரசிகர்கள் மட்டும் ஓட்டு போட்டு ஆட்சி கட்டிலில் அமர முடியாது.  மக்களின் ஆதரவையும் நாம் பெற வேண்டும். இது எம்ஜிஆருக்கு தான் இருந்தது. அவர் பொதுவான மக்களின் ஆதரவு பெற்றிருந்ததால்தான் அவரால் அரசியலில் ஜெயிக்க முடிந்தது. மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனதை வெல்ல வேண்டும். இவர் தொடர்ந்து 10 ஆண்டுகள் பயணம் செய்து கொண்டு இருந்தால்தான் அரசியலை நெருங்க முடியும்” என கூறியுள்ளார்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web