பிரபல லூலூ மாலில் கெட்டு போன இறைச்சி ... மேனேஜருடன் தகராறில் ஈடுபட்ட வாடிக்கையாளர்.. வீடியோ...!

 
லுலு மால்

கோவை பாப்பநாயக்கம் பாளையத்தை சேர்ந்த கணேஷ் லால் என்பவர் நேற்று கோவை அவிநாசி ரோட்டில் உள்ள லுலு மாலில் சிக்கன் வாங்குவதற்காக சென்றுள்ளார். முக்கால் கிலோ சிக்கன் பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டை ரூ.165க்கு வாங்கி உள்ளார். வீட்டில் வந்து சிக்கன் பாக்கெட்டை பிரித்து பார்த்த போது துர்நாற்றம் விசியதுடன், லூலூ மால் நிர்வாகத்தில் மேனேஜரிடம் தகவலை தெரிவித்தார். இதையடுத்து, கெட்டுப்போன சிக்கனுடன் லூலூ மால் வந்து முறையிட்டுள்ளார்.


அப்போது, அங்கு நடப்பதை வீடியோவும் எடுத்தள்ளார். இதனை பார்த்து உஷாரான லூலூ மால் நிர்வாகத்தினர், “சார் சார் ப்ளீஸ் வீடியோ எடுக்காதீங்க..” என முறையிட்டனர். மேலும், நிர்வாகத்திடம் கேட்டால் மேல் வாங்க தனியா பேசிக்கலாம் என்று கூறுவதாகவும் வாடிக்கையாளர் வேதனை தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, சிக்கனை வாங்கி பார்த்த மேனேஜர், தவறை ஏற்று கொண்டு மாற்றி தருவதாக சொன்னார். இருப்பினும், கணேஷ் லால் இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதுபோல பாக்கெட் இறைச்சி விற்பனை கூடங்களை ஆய்வு செய்திட வேண்டும் என தெரிவித்தார்.

Coimbatore LULU Mall: கோவை லுலு மாலில் கெட்டுப்போன இறைச்சி விற்பனை;  துர்நாற்றம் வீசியதால் வாடிக்கையாளர் அதிர்ச்சி.! | 🛍️ LatestLY తెలుగు

இது குறித்து லூலூ மால் நிர்வாகிகள் தரப்பில் கூறியது : அதனை நாங்கள் மாற்றித் தருகிறோம். அந்தப் பொருளை கொடுத்து விட்டு பணமும் கொடுத்து விட்டோம் என்ன தெரிவித்துள்ளனர். ஆனால் வாங்கியவர் கோபித்து கொண்டு சென்று விட்டார் என தெரிவித்துள்ளனர். இது குறித்து கணேஷ் லால் கூறியதாவது ;- லூலூ மால் சூப்பர் மார்க்கெட் கடையில் எப்படி பழைய சிக்கன் கொடுக்கலாம். இன்ஃபெக்ஷன் உணவு தரம் எல்லாம் சரி செய்து தருகின்றனர். பொது மக்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரி அலுவலக அதிகாரிகளிடம் புகார் கொடுத்து உள்ளோம், எனக் கூறினார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web