பிரசித்தி பெற்ற கோவிலில் கெட்டுப்போன புளியோதரை விற்பனை... பக்தர்கள் அதிர்ச்சி!

 
வடிவுடையம்மன்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் கெட்டுப்போன புளியோதரையை விற்ற தனியார் பிரசாத விற்பனையாளரை கோயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.  சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்று திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் . இந்த கோவிலில்  தற்போது, மாசி பிரம்மோற்சவ திருவிழா  கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இதனை நேரில் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களில்  சிலர், வடிவுடையம்மன் சன்னதி அருகே அமைந்துள்ள தனியார் பிரசாதம் விற்பனை செய்யும் கடையில் புளியோதரை வாங்கி சாப்பிட்டனர்.

புளியோதரை

அப்போது அதில் கெட்டுப்போன நாற்றம் வீசியதால் அதிர்ச்சி அடைந்தனர்.  இதனையடுத்து பிரசாதத்தை காசு கொடுத்து வாங்கியவர்கள் புளியோதரை கெட்டுப்போய் உள்ளது என்பதால் கடைக்காரரிடம்  திருப்பி ஒப்படைத்தனர்.அத்துடன் கோவில் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில்  உடனடியாக வந்த  கோயில் நிர்வாக அலுவலர்கள், கெட்டுப்போனதாக கூறப்படும் புளியோதரையை விற்பனை செய்யக்கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தினர். அத்துடன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த  மீதமிருந்த புளியோதரையை  கோணி மூட்டையில் கட்டி, குளக்கரை அருகேயுள்ள குப்பைத்தொட்டியில் போட்டு விட்டனர்.

வடிவுடையம்மன்

இதுகுறித்த   விசாரணை நடத்தியதில் நேற்று முன்தினம் மீதமான பழைய புளியோதரையை, நேற்று தயார் செய்யப்பட்ட புளியோதரையுடன் சேர்த்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.  இனி  இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தனியார் விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இச்சம்பவம் திருவொற்றியூர் முழுவதும் பெரும் பரபரப்பையும், கோவிலுக்கு வந்த பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web