என் நெஞ்சு உடைந்து சிதறியது... கண்ணீர் விட்டு கதறி அழுத செல்வராகவன் !!

 
செல்வராகவன்

13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்றன. அந்த வகையில் நேற்று  அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.  நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில்  இந்திய அணி  240 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ராகுல் 66 ரன்களும், கோலி 54 ரன்களும் எடுத்திருந்தனர்.



இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 241 ரன் எடுத்தால் வெற்றி என்ற  எளிதான இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 43 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த வகையில் ஆஸ்திரேலியா 6வது முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது.  
தொடர்ச்சியாக 10 வெற்றிகளுடன் பைனலுக்குள் நுழைந்த இந்தியா, துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவியது. சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லும் என்ற கனவுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருந்த  கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்கள் சுக்கு நூறாகின.

செல்வராகவன்

 எதிர்பாராத இந்த தோல்வியால் இந்திய வீரர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.   இது குறித்து தமிழ் திரைப்பட இயக்குனர் செல்வராகவன் “இறுதிப்போட்டி நேற்று கிரிக்கெட்டில் தோற்ற பிறகு அழுது கொண்டே இருந்தேன், என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை  நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்ததே இல்லை.  பாவம், அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சு உடைந்து சிதறியது” என பதிவிட்டுள்ளார்.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!