செம மாஸ்... புனித் ராஜ்குமார் ரசிகர்களுக்காக பிரத்யேக செயலி... APPU PRK .. அக்.25ல் அறிமுகம்!
‘பவர் ஸ்டார்’ புனித் ராஜ்குமார் ரசிகர்களுக்காக உலகிலேயே முதன்முறையாக தயாரிக்கப்பட்ட ‘அப்பு பிஆர்கே ஃபேண்டம்’ செயலி அக்டோபர் 25 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.
சனிக்கிழமை இந்த செயலியின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. டிரெய்லரில் நடிகர் சுதீப் குரல் கொடுத்து, புனித்தின் வாழ்க்கை, சினிமா பயணம், தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் சமூக சேவைகள் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.

புனித் ராஜ்குமாரின் மகள் அஸ்வினி புனித் ராஜ்குமார், ட்வீட்டில் கூறியதாவது, “ஒவ்வொரு ரசிகரின் இதயத்திலும், ஒவ்வொரு வீட்டிலும், அப்புவின் நினைவுகள் மறக்க முடியாதவை… அன்பான இதயங்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் ரசிகர் செயலி. உண்மையான காதல் ஒருபோதும் மங்காது என்று நம்பும் ஒவ்வொரு ரசிகருக்கும் அர்ப்பணிக்கப்பட்டது” என்றார்.

செயலி வெளியீட்டு விழாவில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் பலர் பங்கேற்பர். டி.கே. சிவகுமார், “ஒரு துணை இல்லாத வாழ்க்கை ஒருபோதும் உயிருடன் இல்லை… அந்த வாழ்க்கை இப்போது நம் அனைவருக்கும் நெருக்கமாகி வருகிறது” என்றும் குறிப்பிட்டார்.
செயலி புனித் ராஜ்குமார் பற்றிய சிறப்புத் தகவல்களும், அவரது ரசிகர்களுக்கான புதிய அனுபவங்களையும் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
