செம மாஸ்... விஜய் 'GOAT' படத்தில் தல அஜித்.. சஸ்பென்ஸ் உடைத்த இயக்குநர் வெங்கட்பிரபு!
நடிகர் விஜயின் 'GOAT' படத்தில் அஜித் இருப்பது குறித்த தகவலை இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்டுள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர்கள் விஜய், பிரபுதேவா, பிரஷாந்த், சிநேகா, லைலா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'GOAT'. அடுத்த வாரம் படம் வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான புரோமோஷனை படக்குழு தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இயக்குநர் வெங்கட்பிரபு யூடியூப் தளங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.
'GOAT' படத்தில் பல சர்ப்ரைஸ் உள்ளதாகவும் அதை பேட்டிகளில் யாரும் வெளிப்படுத்த கூடாது என விஜய் விரும்புவதால் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபுவை மட்டுமே பேட்டி கொடுக்க சொல்லி விஜய் சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய பேட்டியில் 'GOAT' படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கிய சஸ்பென்ஸ் ஒன்றை உடைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. 'GOAT' படத்தின் ட்ரைய்லரில் ‘சத்தியமா இனிமே குடிக்க மாட்டேன்’ என விஜய் வசனம் பேசுவார். இதே வசனத்தை முன்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘மங்காத்தா’ படத்தில் அஜித் பேசியிருப்பார். இதே போன்று 'GOAT' படத்திலும் அஜித் வாய்ஸ் அல்லது அஜித் ரெஃபரன்ஸ் அல்லது அஜித்தே கூட வருவார் என சஸ்பென்ஸ் உடைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. இதேபோல, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் விஜய் ரெஃபரன்ஸ் வரும் என்ற செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!