செம... மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ1000.. இன்று முதல் ஹால்டிக்கெட்!!

 
கல்வி உதவித்தொகை

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை அரசு பள்ளிகளில் கொண்டுவரவும், மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக 11 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. மாணவர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் நோக்கில், பள்ளி கல்வித்துறை இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.

உதவித் தொகை

ஒவ்வொரு வருடமும் இந்த தேர்வு  நடைபெற உள்ளது.  இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகளுக்கு   இளங்கலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.  அந்த வகையில் நடப்பாண்டில் முதலமைச்சர் திறனாய்வு தேர்வு அக்டோபர் 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர்  "அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கவும்  நடப்பு கல்வியாண்டு முதல் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெறும் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகளுக்கு என மொத்தம் 1000 பேருக்கு இளங்கலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.  அந்த வகையில் நடப்பாண்டு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு அக்டோபர் 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

மாணவிகள்

இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் ஆன்லைனில்  வெளியிடப்படும். மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் பயனர் பெயர், கடவுச்சொல் போன்ற தகவல்களை உள்ளீடு செய்து   ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஹால் டிக்கெட்டில் பெயர், தேதி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web