தேர்தலுக்கு முன்பே செமஸ்டர் தேர்வுகள்... அமைச்சர் அறிவிப்பு... !

 
செமஸ்டர்

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனையடுத்து ஆரம்ப கட்ட பணிகள், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. இதன் அடிப்படையில் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை விரைந்து முடிக்க  தமிழ்நாட்டு மாநிலக் கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி  10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 26  முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1 முதல் 22ம் தேதி வரை  நடைபெற உள்ளன.

செமஸ்டர்

மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு,  முன்கூட்டியே தேர்வுகள்  நடத்தப்பட உள்ளன.   11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4 முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளன. 
மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு,   கடந்த ஆண்டைக் காட்டிலும்  10 நாட்கள் முன்னதாக பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.    மே 6ம் தேதி 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோல மே 10ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஸ்   அறிவித்து இருந்தார்.

தேர்வுக்கு தயாராகும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!!நேரடி செமஸ்டர் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு!!


இந்நிலையில் தற்போது  பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளன. அதன்படி  தேர்தலுக்கு முன்பாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்.இது குறித்து விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில்  ”தேர்தலுக்கு முன்பாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு,  அதை அடிப்படையாகக் கொண்டு,  செமஸ்டர் தேதிகள் அறிவிக்கப்படும்.  அதே போல தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்’’ என  உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web