செம லிஸ்ட்... அக்.5ல் பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பம்... யார் யார் போட்டியாளர்கள் தெரியுமா?!
அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் சீசன் 9 துவங்க உள்ள நிலையில், பிக்பாஸ் பட்டத்தை வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகையை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிக்பாஸ் 9வது சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார்.

இதுவரை ஆரவ், ரித்விகா, முகென் ராவ், ஆரி அர்ஜுனன், ராஜூ ஜெயமோகன், முகமது அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டின் வெற்றியாளர்களாகத் திகழ்ந்துள்ளனர். நடிகை ஓவியாவின் ரசிகர்களிடையேயான பிரபல்யம், கவின் – லாஸ்லியா காதல், பிரதீப்பின் ரெட் கார்டு, சித்தப்பா சரவணனின் வெளியேற்றம், தாடி பாலாஜி சம்பவம், எழுத்தாளர் பவா செல்லதுரையின் எச்சில் துப்பும் சம்பவம் போன்ற பல முக்கிய நிகழ்வுகள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறியுள்ளன.
முதல் சீசனிலிருந்து ஏழாவது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். தற்போது 9 ஆவது சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் 9வது சீசனில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில் நடிகர் சித்து, பாரதி கண்ணம்மா ஃபரினா ஆசாத், சீரியல் நடிகை ஜனனி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பட்டி மன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் உட்பட பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. குறிப்பாக ஹார்ட் பீட் வெப் தொடரில் முக்கிய ரோலில் நடித்து வந்த பாடினி (அனிதா) மற்றும் கார்த்திக்குமாரின் (விஜய்) சிறு வயது காதாபாத்திரத்தில் நடித்த ரோஷனும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
