நானும் செங்கோட்டையனும் மீண்டும் சந்திக்க வாய்ப்புள்ளது – ஓ.பன்னீர்செல்வம்!

 
சசிகலா ஓபிஎஸ்

அதிமுகவில் உருவாகியுள்ள புதிய அரசியல் பரபரப்பை மத்தியில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரைப் பகுதியில் உள்ள தனது இல்லத்தில், ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்கள் இன்று சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து பதிலளித்தார்.

செங்கோட்டையன்

அப்போது ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், “முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நானும் மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நாளை சென்னையில் நடைபெறும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு, அனைவரின் முன்னிலும் எனது கருத்தை தெரிவிக்கிறேன்” என்றார்.

சசிகலா ஓபிஎஸ்

அதிமுகவில் சமீபத்தில் ஏற்பட்ட நீக்கல் நடவடிக்கைகள் மற்றும் பி-டீம் குற்றச்சாட்டு விவகாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ஓபிஎஸ்-செங்கோட்டையன் சந்திப்பு சாத்தியம் குறித்த இந்தக் குறிப்பால் அதிமுக உள்துறை அரசியலில் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?