“செங்கோட்டையன் அதிமுகவில் ராஜாவா இருந்தாரு... இப்போ கூஜா தூக்கப் போய்ட்டாரு!” – திண்டுக்கல் சீனிவாசன்!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், செங்கோட்டையன் ஆகியோரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த நால்வரும் அதிமுக சட்ட விதிகளின்படி மற்றும் பொதுக்குழு முடிவின்படி நீக்கப்பட்டவர்கள். அவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. சசிகலா சொல்வது போல நானும் சொல்கிறேன் – *‘Wait and See’.* இவர்களின் அரசியல் நிலைமை மூன்று மாதங்களில் என்ன ஆகப் போகிறது என்பதை காத்திருந்து பாருங்கள்.

எடப்பாடி பழனிசாமியிடம் 75 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஆனால் சசிகலா, டிடிவி தினகரன் போன்றோரிடம் ஒரு எம்எல்ஏவாவது இருக்கிறார்களா? 2021 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் துரோகிகள் தான்” என்றார்.
தொடர்ந்து அவர், “திமுக அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, 5 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கிறது. அதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். திமுக கூட்டணி மெகா கூட்டணி அமைத்தாலும் வெற்றி பெற முடியாது. இந்த ஆட்சி முடிவடையும் நாட்கள் தொடங்கிவிட்டது.
துரோகிகளை அதிமுகவில் சேர்க்க மாட்டோம். அதிமுகவில் செங்கோட்டையன் ராஜாவாக இருந்தார், ஆனால் இப்போது துரோகிகளுடன் கூஜா தூக்கச் சென்றுள்ளார். பதவி இருக்கும்போது மரியாதை கிடைக்கும்; இல்லாவிட்டால் யாரும் நினைவில் வைக்க மாட்டார்கள்.

ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் தேவராக இருக்கும்போது கொங்கு வெள்ளாள கவுண்டராகச் சேர்ந்த செங்கோட்டையனை அவர்கள் மரியாதை செய்யவில்லை. அதிமுகவில் வெட்டி ஆபீஸராக உள்ள சிலர் மட்டுமே செங்கோட்டையனை நோக்கிச் செல்வார்கள்.
செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது நூறு சதவீதம் சரியான தீர்மானம். கட்சிக்கு ஒழுங்கு அவசியம். அந்த நால்வரும் ஒன்று சேர்ந்தாலும் தென் மாவட்ட வாக்குகள் அதிமுகக்கு பாதிப்பில்லை” என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
