மதுரையில் பரபரப்பு... 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

 
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஒரே நேரத்தில் மதுரையில் 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும்  ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள பள்ளிகள், முதல்வர் வீடு, ஆளுநர் அலுவலகம், விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக போலியான மிரட்டல் கடிதங்கள் இமெயிலில் அவ்வப்போது வந்து பதைபதைக்க செய்கிறது. 

வெடிகுண்டு மிரட்டல்

இந்நிலையில், தற்போது மதுரையில் நரிமேடு, பொன்மேனி, நாகமலை, உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மதுரையில் மட்டும் 8 பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்துள்ளதாகவும், இதனை அடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில் இது வெறும் வதந்தி என்றும், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 

வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல் வந்த அனைத்து பள்ளிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு முடிவடைந்ததாகவும், எனவே மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web