இராமேஸ்வரத்தில் பரபரப்பு... 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

 
23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

நேற்று, தமிழக மீனவர்கள் 23 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதைக் கண்டித்து இன்று இராமேஸ்வரத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை தமிழக மீனவர்கள் 23 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். படகையும் கைப்பற்றினர். இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல வருடங்களாக நீடித்து வரும் இந்த பிரச்சனை குறித்து இது வரை முறையான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று பொதுமக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.

மீனவர்களின் படகுகள்

இந்நிலையில், நேற்று இந்திய - இலங்கை எல்லைப்பகுதியில் மீனவர்கள் முகாமிட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.மீனவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து, மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்ரனர். 

இதனால் கவலையடைந்த பிற மீனவர்கள், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதுடன், உயிருக்கும் ஆபத்து நேர்ந்து வருகிறது. இது குறித்து உடனடியாக மாநில, மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று இராமேஸ்வரத்தில் மீனவர்கள் உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் மீதான கைது மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web