ரிலாக்ஸ் ஆன முதலீட்டாளர்கள்... சென்செக்ஸ் 1200 புள்ளிகள்... நிஃப்டி 21700 டாப்ஸ் | இன்றைய சந்தை ஏற்றத்திற்கான காரணிகள்!

 
காளை

கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை அதள பாதாளத்திற்கு சரிந்து கொண்டிருந்த நிலையில், கோடிகளில் இழந்த முதலீட்டாளர்கள் இன்றைய வர்த்தகத்தில் சந்தை ஏற்றத்தை துவங்கிய நிலையில் ரிலாக்ஸ் ஆக துவங்கியுள்ளனர். 

இன்றைய (ஜனவரி 29) பங்குச் சந்தையில் முன்னணி எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் இன்ட்ரா டே வர்த்தகத்தில் 1,309 புள்ளிகள் உயர்ந்து 72,010 அளவை எட்டி முதலீட்டாளர்களை மூச்சுவிட செய்துள்ளது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) மற்றும் நிதித் துறையின் பிற ஹெவி வெயிட்களின் பங்குகளை திடமான கொள்முதல் செய்ததால், கடந்த வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் ஒவ்வொன்றும் 1.5 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தன. .  

இன்ட்ரா டே வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 1,309 புள்ளிகள் உயர்ந்து 72,010 நிலைகளை எட்டியது. நிஃப்டி50 ஷேர்கள் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 21,763 இன் இன்ட்ரா-செஷனைத் தொட்டது. 

இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் குறியீடு, இறுதியில், 1,241 புள்ளிகள் அல்லது 1.76 சதவீதம் உயர்ந்து, 71,942 ஆக முடிந்தது.  ஏற்ற இறக்கக் குறியீடு, இந்தியா VIX கிட்டத்தட்ட 13 சதவீதத்தை எட்டியது.அதே சமயம் இன்றைய சந்தையில், நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.6 சதவீதம் மற்றும் 1.02 சதவீதம் அதிகரித்தன. 
நிஃப்டி பொதுத்துறை வங்கிக் குறியீடு 2 சதவீத ஏற்றத்துடன் பந்தயத்தில் முன்னணியில் இருந்தது, அதைத் தொடர்ந்து நிஃப்டி நிதிச் சேவைகள் மற்றும் ஆட்டோ குறியீடுகள் (1.6 சதவீதம்) உள்ளன.  
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் நிஃபடி உயர தொடங்கியதற்கான முக்கிய காரணிகளைப் பற்றி பார்க்கலாம் வாங்க... 
இன்றைய வர்த்தகத்தில் ஆர்ஐஎல் பங்குகள் சாதனை உயர்வை எட்டியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் பங்குச்சந்தைகளில் 7 சதவீதத்திற்கும் மேலாக முன்னேறியது, மேலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டியது. இன்றைய வர்த்தகத்தின் மூலமாக பங்குச்சந்தை மூலதனமும் (எம்-கேப்) ரூ.19டிரில்லியன் மதிப்பைக் கடந்தது. பங்குச்சந்தை வர்த்தக முடிவில் ரூ.19.59 டிரில்லியனாக  பங்குச்சந்தை மூலதனம் இருந்தது. 

ஷேர்
முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனத்தின் பங்குகள் சென்செக்ஸில் 11 சதவீத எடையையும், நிஃப்டி50 இல் 14 சதவீதத்தையும் வைத்துள்ளன. இது சென்செக்ஸ் குறியீட்டில் ஏறக்குறைய 45 சதவீத லாபத்தைக் கொண்டுள்ளது

இன்றைய வர்த்தகத்தில் ஆர்ஐஎல் தவிர, ஹெச்டிஎஃப்சி வங்கி, லார்சன் அண்ட் ட்ர்ப்ரோ, கோடக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ் மற்றும் என்டிபிசி உள்ளிட்ட பிற ஹெவி வெயிட் பங்குகளில் 3.6 சதவீதம் வரை லாபத்துடன்  உயர்ந்தன. 

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) கடனளிப்பதில் அதன் பங்குகளை அதிகரிக்க அனுமதி வழங்கியதை அடுத்து, இன்றைய இன்ட்ரா-டே வர்த்தகத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் பிஎஸ்இயில் கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்து ரூ.1,462.85 ஆக இருந்தது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web