செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்!! காவல் நீட்டிக்கப்படுமா?

 
செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பண  மோசடி செய்த வழக்கில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை விரைவில் முடித்து 2   மாதங்களில் வழக்கை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து சட்டவிராத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில்  ஜூன் மாதம் திடீர் சோதனை நடத்தியது.அந்த சமயத்தில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜி


  மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இதய   அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சில நாட்களில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்த மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த கால கட்டத்தில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை  5  நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்தது. இந்த வழக்கு  எழும்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து எம்பி, எம் எல் ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நீதிமன்றத்தில்   25ம் தேதி காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது   இன்று ஆகஸ்ட்  28  வரை காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.  

செந்தில் பாலாஜி ஸ்டாலின்
இதனையடுத்து செந்தில் பாலாஜி, சுமார் ஒரு மாதங்களுக்கு பிறகு  போலீஸ் வாகனம் மூலம்  நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.  இன்று செந்தில் பாலாஜிக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.   நீதிமன்ற வளாகத்தில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிகளவு கூடுவார்கள் .இதனால் நீதிமன்றத்தில் போலீஸ்  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web