செந்தில்பாலாஜி ஏரியா... இன்று நாமக்கல், கரூரில் தவெக விஜய் பிரச்சாரம்... எகிறும் எதிர்பார்ப்பு!
இன்று நாமக்கல், கரூர் மாவட்டங்களில் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஆதரவு திரட்டுகிறார். கடந்த 13ம் தேதி தனது தேர்தல் பிரசார பயணத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கிய நிலையில், சனிக்கிழமைகளில் மட்டும் அவருடைய பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டது.

நாளை வடசென்னை, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்வார் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. போலீசாரிடமும் இதற்காக த.வெ.க. நிர்வாகிகள் சார்பில் அனுமதி கேட்டு கடிதங்கள் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் விஜய்யின் பிரசார பயணத்தில் திடீர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திமுக முப்பெரும் விழா நடந்து முடிந்த கரூரிலும், நாமக்கல் மாவட்டத்திலும் இன்று 27ம் தேதி விஜய் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். எனவே அவர் வடசென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் எப்போது பிரசாரம் செய்வார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஏரியா என்பதால், எவ்வளவு கூட்டம் கூடும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுக முப்பெரும் மாநாடு நடந்து முடிந்துள்ள இடங்கள் என்பதால் விஜய்யும் எதிர்பார்ப்புடனேயே இன்று பிரச்சாரத்திற்கு கிளம்புகிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
