செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 28ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!!

 
செந்தில் பாலாஜி

எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜரானார். பின்னர், செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 28ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி  பலரிடம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இந்தப் பணத்தை வெளிநாடுகளில் பரிமாற்றம் செய்ததாகவும் தகவல் வெளியானது.

செந்தில் பாலாஜி

இந்த புகாரின் அடிப்படையில்   ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவில்   அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அந்த சமயத்தில்  அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சரியானது தான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்நிலையில் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

செந்தில் பாலாஜி
 ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 25ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி கொள்ள  சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஆகஸ்ட் 28ம் தேதி அன்று விசாரணைக்கு வர இருப்பதால்   செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 28 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web