உஷார்... மருத்துவமனைகளில் டெங்குவிற்கு தனிவார்டு!! நிரம்பி வழியும் நோயாளிகள்!!

 
டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தேவையான தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.  சமீபத்தில் சென்னையை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். இதனைஅடுத்து சென்னையில்    சுகாதாரத் துறை சார்பில் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உஷார்!! இந்த 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு !!

இதேபோல் செப்டம்பர் மாத தொடக்கம் முதல் தற்போது வரை  200க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  தினசரி 20 முதல் 30 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்  குறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.  

டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..


இந்நிலையில், சென்னையில்  3 அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி  சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகிய 3 மருத்துவமனைகளில் டெங்கு சிகிச்சைக்காக  தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு தினமும் கஞ்சி, உப்பு சர்க்கரை கரைசல், நிலவேம்பு குடிநீர்  வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web