சபரிமலையில் குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தனிவரிசை... !!

 
சபரிமலை

சபரிமலையில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தேவசம்போர்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பதி வரிசை முறைப்படி பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை    பெரிய நடைபந்தலில்  பிரித்து தனித்தனிக் குழுக்களாக காத்திருப்பு அறைகளில் அமர வைக்கப்படுகின்றனர்.

 

சபரிமலை

பின்னர் ஒவ்வொரு அறையாக தரிசனத்துக்கு திறந்துவிடப்படுகிறது. இதனால் பக்தர்களின் சிரமம் குறைவதாகவும், விரைவான தரிசனம் கிட்டுவதாகவும்  தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வரிசையில்  ஒரு வரிசை குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுடன் அவரது தந்தை, பாதுகாவலர் ஒருவரும் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

பாருக்குட்டியம்மா

வயது முதிர்வால் சோர்வடைந்தவர்களும் இந்த கியூவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் உடனடியாக  நேர காத்திருப்பு இல்லாமல் 18 படி ஏறி சென்று ஐயப்பனை தரிசனம் செய்யலாம்.  குழுக்களாக வருபவர்கள் இவ்வாறு பிரிந்து தனி கியூவில் செல்லும்போது எங்கு சந்திக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிடப்படுகிறது.  பக்தர்களின் தேவைகள் மற்றும் வசதிகளை பொறுத்து சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஓட்டல்களில் உணவு தரத்தை கண்காணிக்கவும், பக்தர்களின் புகார்களை கேட்கவும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது .  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web