வாகன ஓட்டிகள் அதிர்ச்சி... செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஆண்டுக்கு இருமுறை பரிசீலிக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன.
இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஜுன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. 5 சதவீதம் வரை அப்போது கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 1ம்தேதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!