தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரம் கடும் வெயில் நீடிக்கும்... வானிலை மையம் எச்சரிக்கை!

 
வெயில்

வடகிழக்கு பருவமழை தொடங்கி சில பகுதிகளில் மழை பொழிந்தபின்னர் தற்போது இடைவெளி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெப்பம் அதிகரித்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவான ‘மோந்தா’ புயல் கரையை கடக்கும்போது, கிழக்கு திசை காற்றை இழுத்துச் சென்றது. இதனால் கிழக்குக் காற்று தளர்ந்து, மேற்கு திசை காற்று ஊடுருவி வருகிறது. இதுவே தமிழகத்தில் வெப்பநிலையை திடீரென உயர்த்தியுள்ளது.

வெயில் மாஸ்க் மாணவிகள் இளம்பெண்கள்

சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று 35.5 டிகிரி செல்சியஸ் (95.9 ஃபாரன்ஹீட்) என, நவம்பர் மாதத்திற்கான வரலாற்றிலேயே மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது சென்னை மட்டுமல்லாமல் மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் வெயில் தாக்கத்தை அதிகரித்துள்ளது.

வானிலை நிபுணர்கள் தெரிவிப்பதாவது: “கிழக்கு திசை காற்றின் குறைவு, சுமத்ரா கடல் பகுதியில் வெப்பநிலை உயர்வு ஆகியவை தற்போதைய வெப்பநிலை அதிகரிக்க காரணமாக உள்ளன. அடுத்த ஒரு வாரம் இதே நிலை நீடிக்கும். இருப்பினும் வெப்பசலனத்தால் சில இடங்களில் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்” என கூறினர்.

வெயில் வெப்பம் மாணவிகள் கல்லூரி

இதன்படி, நாளை (திங்கட்கிழமை) முதல் வரும் 8ஆம் தேதி வரை தமிழகத்தின் பல இடங்களில் பகலில் கடும் வெப்பம், இரவில் இடி மின்னலுடன் சிறு மழை என மாறிமாறும் வானிலை நிலவும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?