குடிநீருடன் கலந்து வந்த கழிவுநீர் .. உடல் உபாதையால் 10 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 36 வது வார்டு திருமால் நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதனையடுத்து சில மாதங்களாக பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து காவிரி கூட்டு குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது.

இது குறித்து வார்டு கவுன்சிலர் வெற்றிகொண்டான் நகர மன்ற கூட்டத்தில் நகர மன்ற தலைவரிடம் பலமுறை புகார் அளித்துள்ளார். அதேபோல் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறைச் சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கழிவுநீர் கலந்த குடிநீரை அப்பகுதிமக்கள் குடித்து வந்துள்ளனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் 10க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
