நடுவானில் பறந்த விமானத்தில் உடலுறவு!! முகம் சுளிக்க வைக்கும் வீடியோ....

 
விமானக் கழிவறை

சமீபகாலமாக விமானப் பயணங்களில் சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. விமானப்பணிப்பெண்ணுடன் தகராறு, அருகில் அமர்ந்திருப்பவரிடம் தகாத நடைமுறை, விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே ஜன்னல் கதவுகளை திறத்தல் , விமானத்திற்குள் புகைப்பிடித்தல் என பல்வேறு வகையான குற்றச்சாட்டுக்கள் பெருகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த விமான இயக்குநரகம் பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது.ஆனால் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த இயலாமல் திண்டாடி வருகின்றன. அந்த வகையில் விமானக்கழிவறையில் உடலுறவில் ஈடுபட்டு  சக பயணிகளை முகம் சுளிக்க வைக்கும் செயல்களில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செப்டம்பர் 8ம் தேதி இங்கிலாந்தில்   லூடன் நகரில் இருந்து இபிசா நகருக்கு  ஈசிஜெட்  பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. இதில் பயணம் செய்தவர்களில் தம்பதியர்  விமான கழிவறைக்குள்  உடலுறவில் ஈடுபட்டனர்.  வெகுநேரம் கதவு திறக்கப்படாததால் விமான பணிப்பெண் அங்கு சென்று பார்த்தார். மற்ற   பயணிகளும் அங்கு சென்றனர். பின்னர், தயங்கி தயங்கி விமான பணிப்பெண், கழிவறையின் கதவை திறந்துள்ளார். 

அதிர்ச்சிகரமான சம்பவம்   அரைகுறை ஆடையுடன் உள்ளே இருந்த தம்பதியர், உடனே கதவை அடைத்துவிட்டனர். இதனை பயணிகளில் ஒருவர் வீடியோ எடுத்து  சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். அது தற்போது   வைரலாகிவருகிறது அந்த வீடியோவில், விமான பணிப்பெண் ஒருவர் கழிவறை கதவுக்கு வெளியே பதற்றத்துடன் நிற்கிறார்.

விமானக் கழிவறை

இதைப் பார்த்த பயணிகள் ஆர்வத்துடன் கதவை திறக்க  காத்து நிற்கின்றனர்.   கதவை திறந்த போது, தம்பதியினர் அலங்கோலமாக இருந்தனர். மற்ற பயணிகள் இதைப் பார்த்து முகம் சுளித்து கூச்சலிட்டனர்.  உள்ளே இருந்தவர் உடனே கதவை அடைக்கிறார். மற்றொரு பெண்  “ஓ மை காட்'' என அலறுகிறார். விமான பணியாளர்களும் சக பயணிகளும் என்ன செய்வதென தெரியாமல்  திகைத்து நிற்கின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web