மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்... 4 இளம்பெண்கள் மீட்பு!

 
மசாஜ் சென்டர்
 

தமிழகம் முழுவதுமே பல மசாஜ் செண்டர்களில் பாலியல் தொழில்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் அடிக்கடி எழுந்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் மசாஜ் செண்டர்களில் பாலியல் தொழில் நடந்து வந்தது குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் மசாஜ் சென்டர் ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்கள் போலீசாரால் மீட்கப்பட்டனர்.

மசாஜ் ஸ்பா

தூத்துக்குடியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்து வருவதாக மாவட்ட போலீஸ் எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குறிப்பிட்ட மசாஜ் சென்டரில் சோதனை நடத்த தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். 

 மசாஜ் சென்டர்

இதனைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி தலைமையிலான போலீசார் தூத்துக்குடியில் குறிப்பிட்ட ஒரு மசாஜ் சென்டரில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு இருந்த 4 இளம்பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். மசாஜ் சென்டர் உரிமையாளர், மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web