ஒபாமாவுடன் உடலுறவு... லாரி சின்கிளேர் பரபரப்பு!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா. . ஃபாக்ஸ் நியூஸ் முன்னாள் தொகுப்பாளரான டக்கர் கார்ல்சன் தன்னுடைய நேர்காணலில், குற்றவாளியான கான் ஆர்ட்டிஸ்ட் லாரி சின்க்ளேர், ஒபாமாவுடன் உடலுறவில் ஈடுபட்டதாகக் கூறி அதிர வைத்தார். கார்ல்சன் எக்ஸ் வலைதளத்தில் லாரி சின்க்ளேருடனான நேர்காணலை பகிர்ந்து கொண்டார். “1999-ல் பாரக் ஒபாமாவுடன் உடலுறவு கொண்டதாகக் கூறும் நபர் தனது கதையைச் சொல்கிறார்” என்று அவர் அதற்கு தலைப்பிட்டிருந்தார்.
A man who claims he had sex with Barack Obama in 1999 tells his story.
— Tucker Carlson (@TuckerCarlson) September 5, 2023
Wednesday. 6pm ET. pic.twitter.com/iDYMSww1KS
“நான் வெளியில் உள்ள ஒரு மதுக்கடையில் இருந்தேன், பராக் ஒபாமா என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இருவரும் கோகைன் குடித்தோம். அதற்கு 250 டாலர் கொடுத்தேன்” என அமெரிக்க வர்ணனையாளர் கார்ல்சனிடம் சின்க்ளேர் தெரிவித்தார். மேலும் தன்னுடன் ஒபாமா புகைப் பிடித்ததாக கூறிய அவர், அப்போது ஒபாமா இல்லினாய்ஸ் மாநில செனட்டராக இருந்தது தனக்கு தெரியாது எனவும் சின்க்ளேர் கூறினார்.
“நீங்கள் அவருடன் 2 முறை உடலுறவு கொண்டுள்ளீர்கள், கோக்கைன் உட்கொண்டீர்கள், இரண்டு முறை புகைப் பிடித்துள்ளீர்கள், ஆனால் அவர் யார் என்று உங்களுக்குத் தெரியாதா?” என கார்ல்சன் கேட்கிறார். அதில் “எதுவும் தெரியாது” என்றார் சின்க்ளேர். 2008ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா போட்டியிடும் போது, லாரி சின்க்ளேர் இதே போன்ற குற்றச்சாட்டை வைத்தார்.
தவிர, சின்க்ளேர் ஒபாமாவுடன் 2 முறை உடலுறவு கொண்டதை விரிவாகக் கூறினார். அதாவது ஒரு முறை லிமோவின் பின்புறத்திலும் மற்றொன்று இல்லினாய்ஸின் குர்னியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையிலும் என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. இருப்பினும், சின்க்ளேர் தனது குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!