பாலியல் தொல்லை.. கல்லூரி இணைப் பதிவாளர் மீது மாணவி பகீர் குற்றச்சாட்டு!

 
பாலியல்

சென்னை காரப்பாக்கத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இணைப் பதிவாளர், ஆராய்ச்சி படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் பல்கலைக்கழக மகளிர் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக இணைப் பதிவாளரிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. அதில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒவ்வொரு மாணவியும், இணைப் பதிவாளருடன் அட்ஜஸ்ட் செய்து, அவர் எப்போது அழைத்தாலும் அவரது அறைக்கு வருமாறு கட்டாயப்படுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட மாணவி புகார் தெரிவித்துள்ளார்.

பாலியல் செக்ஸ் பலாத்காரம் கற்பழிப்பு பெண்

இதில் உயர்கல்வித்துறை உரிய கவனம் செலுத்தி மாணவர்களை தவறான பாதைக்கு அழைக்கும் பல்கலைக்கழக இணைப் பதிவாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவி தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web