சபரிமலையில் பாக்கெட் ஷாம்பு, செயற்கை குங்குமம் விற்பனை செய்யத் தடை!

 
சபரிமலை
 

சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சுற்றுச்சூழல் மாசைத் தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை, பம்பா, எருமேலி பகுதிகளில் பாக்கெட் ஷாம்பு மற்றும் செயற்கை குங்குமம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை

சபரிமலையில் பிளாஸ்டிக் பைகள், ரசாயன பொருட்கள் மற்றும் செயற்கை குங்குமம் பயன்பாட்டால் நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதாக கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பொருட்களின் விற்பனைக்கு அதிகாரப்பூர்வமாக தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கூட்டம்

மேலும், எருமேலியில் உள்ள ஆற்று ஓடைகளின் குறுக்கே வலைகள் அமைத்து பிளாஸ்டிக் மற்றும் வேதியியல் பொருட்கள் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இயற்கை குங்குமம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருட்களையே பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!