நடுரோட்டில் பயங்கரம்.. திடீரென தீப்பற்றிய ஷேர் ஆட்டோ.. உஷாரான ஓட்டுநரால் தப்பிய பயணிகள்..!

 
ஷேர் ஆட்டோ தீ விபத்து

சென்னை அம்பத்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அம்பத்தூர் நடைபாதையில் டாடா ஏசி ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், திடீரென ஆட்டோவில் இருந்து கரும்புகை வெளியே வந்தது.இதைப் பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், ஷேர் ஆட்டோ டிரைவர் உடனே வண்டியை சாலை ஓரமாக நிறுத்தினார். இதையடுத்து உடனடியாக ஷேர் ஆட்டோவில் இருந்து பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறங்கினர். பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில் ஆட்டோ முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

இந்நிலையில், தீ விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஷேர் ஆட்டோவில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். சம்பவம் குறித்து அம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பத்தூர் சாம்பத்தூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web