டிக்கெட் நகலை பகிருங்க..... ஆர்.ரகுமான் ட்வீட்!!

மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்கள் டிக்கெட் நகலை பகிர்ந்து கொள்ளுமாறு ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “ அன்பான சென்னை மக்களே, டிக்கெட் வைத்திருந்தும் துர்திருஷ்டவசமான சூழ்நிலையால் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்குள் நுழைய முடியாதோர் டிக்கெட் நகலை arr4chennai@btos.in அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்கள் குழு விரைவில் பதிலளிக்கும்' என தெரிவித்துள்ளார்.
Grateful to Chennai and the legendary @arrahman Sir! The incredible response, the overwhelming crowd made our show a massive success. Those who couldn't attend on overcrowding, Our sincere apologies. We take full responsibility and accountable. We are with you. #MarakkumaNenjam
— ACTC Events (@actcevents) September 11, 2023
சென்னை பனையூரில் நேற்று ஏ.ஆர்.ரகுமான் “மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மழை, கூட்ட மற்றும் போக்குவரத்து நெரிசல் பலருக்கு இடமின்மை என பல பிரச்சனைகள் இதனால் ரசிகர்கள் வெறியாகி இருக்கின்றனர். சென்னையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி எப்போ என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் பலரும் தயவு செய்து இனிமே இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தீடாதீங்கப்பு எனக் குறிப்பிட்டுள்ளனர். ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி. சென்னை பனையூரில் உள்ள ஆதித்ய ராம் மைதானத்தில் நடைபெற்றது.
இதனை நேரில் கண்டு ரசிக்க காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் பலரால் நிம்மதியாக உட்கார்ந்து நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை. டிக்கெட்டின் விலை ரூ5000, ரூ6000 என வசூலிக்கப்பட்டும் மைதானத்தில் நுழைய முடியாத அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம். இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் மயங்கி விழுந்துள்ளனர். இந்நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காசு கொடுத்தும் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் திரும்பிவிட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிகளவில் டிக்கெட் விற்பனை செய்ததே இந்த குளறுபடிக்கு காரணம் என்கின்றனர் காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள்.
Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to arr4chennai@btos.in along with your grievances. Our team will respond asap🙏@BToSproductions @actcevents
— A.R.Rahman (@arrahman) September 11, 2023
இது குறித்து நிகழ்ச்சியை நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ” சென்னைக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் நன்றி. ஏகோபித்த வரவேற்பு மற்றும் கட்டுக்கடங்காத கூட்டத்தால் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய சக்சஸ் ஆகி உள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். முழு பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் காசை எப்போ திருப்பி தருவீங்கனு சொல்லவே இல்லயே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!