பகீர்... மொட்டையடித்து செருப்பு மாலை போட்டு ஊர்வலம்!!

பீகாரின் கதிகார் மாவட்டத்தில் கபார் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜீவ் குமார் .இவர் சொந்தமாக மாவு மில் வைத்து நடத்தி வருகிறார். இவரது மாவு மில்லில் ஆனந்த் என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். ராஜீவின் மனைவிக்கும், ஆனந்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன்பின்னர் இருவரும் மொபைல் போன் வழியே உரையாடி வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென ஒரு நாள் ராஜீவின் மனைவி ஆனந்தை கடுமையாக விமர்சித்து கணவரிடம் புகார் அளித்துள்ளார். அதில் கடந்த 3 மாதங்களாக ஆனந்த் தன்னை துன்புறுத்தி வந்துள்ளார் என்றும், தேவையற்ற தொலைபேசி அழைப்புகளை விடுத்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.
கணவன் வெளியே சென்றதும் வீட்டுக்கு வந்து விடுகிறார் . ஆனந்த் தகாத முறையில் நடந்து கொண்டு, பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் . அதனால் கத்தி, கூச்சலிடவே குடும்பத்தினர் ஓடி வந்து அவரை பிடித்து விட்டனர் எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, பெண்ணின் உறவினர்கள் அந்த நபரை அடித்து, உதைத்தனர். அவரது தலையை ஒரு புறம் மொட்டையடித்து, தாடியையும் ஒரு புறம் மழித்து விட்டுள்ளனர். செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். அந்த பெண் கூறும்போது, தன்னுடன் பேச கூடாது என தன்னுடைய கணவரை ஆனந்த் மிரட்டினார்.
அப்படி இல்லையென்றால், கணவரை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார். ஆனந்த்திடம் இது குறித்து கேட்கப்பட்ட போது அவர் தன்னை அப்பாவி. ராஜீவின் மனைவி தான் தன்னை அடிக்கடி தொலைபேசி வழியே பேசினார். மற்றபடி காதல், கள்ளத்தொடர்பு எதுவும் கிடையாது எனக் கூறினார். தகராறின் அடிப்படையில் ஆனந்த் கைது செய்யப்பட்டார். இரு தரப்பிலும் யாரும் புகார் எதுவும் அளிக்கவில்லை இதனால் ஆனந்த் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!